கப்டன் கோடீஸ்வரன் அவர்கள் கிரான், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். குமாரசாமி சிவமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஜூன் 1990 அன்று திருகோணமலை மாவட்டம் கும்புறுமூலைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.