மேஜர் அரிச்சந்திரன் அவர்கள் சின்னபண்டிவிரிச்சான், மடு, மன்னாரைச் சேர்ந்தவர். யூலியன் றெஜீராயேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஜூலை 2000 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல்ப் பகுதியில் சிறிலங்கா வான் படை கிபீர் வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.