கப்டன் பராக்கிரமன் அவர்கள் விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். குணசேகரம் அந்தோனிராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 நவம்பர் 1999 அன்று அம்பாறை மாவட்டம் வைக்கலைப் பகுதியில் சிறிலங்கா காவல்துறை நிலைய காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது