மேஜர் கதிரவன் (மாவி) அவர்கள் குச்சவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். அந்தோனிதாசு கிறிஸ்தோப்பர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 31 அக்டோபர் 1998 அன்று திருகோணமலை மாவட்டம் கள்ளப்பத்தைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.