கப்டன் தமிழ்ப்பிரியா அவர்கள் 6-ஆம் படிவம், வாரிக்குட்டியூர், வவுனியாவைச் சேர்ந்தவர். தேவதாஸ் ராஜினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஆகஸ்ட் 1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.