வீரவேங்கை முல்லைமதி அவர்கள் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நடராசா வனிதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சிப் பகுதி நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.