வீரவேங்கை ராஜினி அவர்கள் கடற்கரைச்சந்தி, களுவங்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பரசுராமன் பார்வதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஜூன் 1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சிப் பகுதி நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.