கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி அவர்கள் 3-ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கைலாயநாதன் சுகந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 பிப்ரவரி 1998 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் பபதா தரையிறங்கு கலத்தை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முதல் பெண் கரும்புலி மாவீரர் இவராவார்.