வீரவேங்கை ஸ்ரிபன் அவர்கள் அனலைதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடராசா ஆனந்தராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஜூன் 1984 அன்று யாழ். மாவட்டம் ஊர்காவற்றுறை சரவணைப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையுடனான சமரின் பின் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.