வீரவேங்கை சுடரொளி அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மயில்வாகனம் சங்கர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 11 அக்டோபர் 1997 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.