• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

மியான்குளத்தில் காவியமான 35 வேங்கைகளின் நினைவு


 09.04.1991 அன்று கரடியனாறு முகாமிலிருந்து புலுட்டைமானோடை வழியாக மியான்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகளால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்கா வான்படையின் உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் விடுதலைப் புலிகள; சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர். இத் தாக்குதலின்போது 20 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இத்தாக்குதலின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் மீட்கப்படாமையால் மறுநாள் காலை வித்துடல்களை மீட்க முற்பட்டபோது சிறிலங்கா படையினருடன் மீண்டும் கடுமையான சமர் ஏற்பட்டது.  சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சு வானூர்திகள் குண்டு வீச்சிற்கும், வான் படை உலங்கு வானூர்தியின் தொடர்ச்சியான தாக்குதலுக்கும் மத்தியில் காலை 7 மணி முதல் 10 மணிவரை நடைபெற்ற கடுமையான சமரின்போது 15 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் இத் தாக்குதல்களையடுத்து சிறிலங்கா படையினரின் அப்பகுதிகளிலிருந்து பின்வாங்கிச் சென்றனர்.

முதல் நாள் மோதலில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம்

கப்டன் வசந்த் (சின்னத்தம்பி திருமால் - சித்தாண்டி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இன்பராஜ் (சிதம்பரப்பிள்ளை விவேகானந்தராசா - கிரான், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சக்தி (நல்லதம்பி நடராசா - சித்தாண்டி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுகந்தன் (கதிர்காமன் வரதராசா - சித்தாண்டி, மட்க்களப்பு)
வீரவேங்கை ஆதித்தன் (ரகு) (நாகமணி சபேசன் - கொம்மாதுறை, செங்கலடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை பத்மன் (தர்மலிங்கம் புனிதநாதன் - முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை புஸ்பராசா (மாணிக்கப்போடி தர்மலிங்கம் - ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், மட்டக்களப்பு)
வீரவேங்கை கண்ணன் (வடிவேல் கண்ணன் - கிரான், மட்டக்களப்பு)
வீரவேங்கை விசாகன் (சீனித்தம்பி தயாபரன் - கல்லடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சுதாகரன் (றைசன் எசிங்டன்டிமா - கல்முனை, பொத்துவில், அம்பாறை)
வீரவேங்கை ருக்மன் (குழந்தைவேல் தயாபரன் - களுதாவளை, மட்டக்களப்பு)
வீரவேங்கை கைலன் (சிவலிங்கம் நடராசா - இராயபுரம், மரப்பாலம், மட்டக்களப்பு)
வீரவேங்கை மனோ (அழகையா கந்தரத்தினம் - நாவற்காடு, மட்டக்களப்பு)
வீரவேங்கை தாஸ் (தீசன்) (வைரமுத்து சுந்தரலிங்கம் - தாழங்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை மிதுரன் (ரவீந்திரன் - ஏறாவூர், மட்டக்களப்பு)
வீரவேங்கை திலகன் (கோபால் இராமநாதன் - அக்கரைப்பற்று, அம்பாறை)
வீரவேங்கை விதுவன் ( மட்டக்களப்பு)
வீரவேங்கை அருள் (வேல்முருகு மேகநாதன் - தாழங்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை மைனா (பொன்னுத்துரை சுரேஸ்குமார் - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை நெடுமாறன் (செல்லத்துரை சந்திரன் - அக்கரைப்பற்று, அம்பாறை)

வித்துடல்களை மீட்க நடந்த சமரின்போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம்.

கப்டன் சங்கர் (முருகையா சுந்தரலிங்கம் - கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு)
கப்டன் அமுதன் (கறுவல்தம்பி நவரட்ணம் - கிரான், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் றொமேஸ் (கந்தப்பர் கதிரவேல் - வந்தாறுமூலை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பாப்பா (சின்னத்துரை சந்திரன் - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சாள்ஸ் (க. பரமநாதன் - தம்பிலுவில், அம்பாறை)
2ம் லெப்டினன்ட் மாவி (வல்லிபுரம் சிவநோக்கம் - திருப்பழுகாமம் மட்டக்களப்பு)
வீரவேங்கை கிரி (சிவயோகநாதன் - நாவற்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை அமல்ராஜ் (மயில்வாகனம் இராஜேந்திரன் - வெல்லாவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை ராஜேந்திரன் (வேலாயுதம் சுந்தர்ராஜன் - பொத்துவில், அம்பாறை)
வீரவேங்கை செல்வரூபன் (பொன்னையா புண்ணியமூர்த்தி - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை நிமால் (யோகன் - நாவற்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை ராவ் (தம்பிப்பிள்ளை ரவீந்திரநாதன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை அல்பேட் (சின்னப்பா பிரான்சிஸ் - பதுளை, சிறிலங்கா)
வீரவேங்கை ஜெயவேந்தன் (மாணிக்கம் மகாலிங்கம் - கொம்மாதுறை, மட்டக்களப்பு)
வீரவேங்கை அசோக் (செல்வராசா நிர்மலராசா - வந்தாறுமூலை, மட்டக்களப்பு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுர்களை ஈகம் செய்த இந்த மான மாவீரர்களை எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.



© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.