• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
கேணல் கிட்டு

கேணல் கிட்டு


 தீருவில்,

கடலென மக்கள் இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில்

அடித்து வருத்திய பழைய நினைவைச் சொல்லிக்  கொண்டு

நிற்கும் பன்னிருவரின் நினைவுக் கோயிலைச் சுற்றியும் நிரவியும் மக்கள். நெஞ்சங்களில் கோபம், அழுகை,   கண்ணீர். சோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் எழுந்த சினம் அன்புக்குரியவனை இழந்து விட்ட தவிப்பு.

இயத்தில் விழுந்துவிட்ட இரண்டாவது அடி.

அதே தீருவில்.

 கிட்டண்ணையும் அவர் தோழர்களும் கப்பலில்... படமாக....  நம்பமுடியாத நிஜம்.  படத்திலும் கிட்டண்ணையின் முகத்தில் கனிவான பார்வை தன் தலைவனை வரவேற்கும் மகிழ்ச்சியான சிரிப்பு. அம்மா தன் இளைய மகனின் இழப்பைத் தாங்கமுடியாமல்  முத்த மகனைக் கட்டியணைத்து அழுதாள் அவளுக்குத் தலைவரும் மகன்தான்.தேசம் அழுதது.

 மக்கள் கூட்டம் தங்கள் நெஞ்சத்தில் வாழ்ந்தவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவனைப் பார்த்து கையசைத்தது. உறுதியான  அசைவு. கண்ணீர் அலைகளினுாடே பிறந்த நம்பிக்கை

தலைவன் இருக்கின்றான் கிட்டண்ணை அடிக்கடி சொன்ன  வார்த்தைகள் அவை.

ஜந்து வருடங்களுக்கு முன்பு. சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். முகங்களில் தலைவனைக் கண்ட மகிழ்ச்சி

தலைவன் சொல்லப் போகும் வார்தைகளுக்காக ஏங்கி நிற்கும் நிமிடங்கள்

அடுத்ததாக தளபதி கிட்டு அவர்கள் பேசுவார். மக்களின் ஆரவாரம் ஆர்ப்பரிப்பு.

அவர்களின் தலைவனின் முன்பு அவர்களின் தளபதி. மகிழ்ச்சிப் பிரபாகம்.தங்கள் தளபதியில் தாங்கள் வைத்திருக்கும் அன்பைத்  தலைவனுக்குக் காட்டும் துடிப்பு உற்சாகம் அந்த  ஆர்ப்பரிப்புக்குள் வார்த்தைகள்  தெளிவாக விழவில்லை. ஒன்றிரண்டு மனதில் விழுந்தது

அப்படியே  பதிந்தது.தலைவர் இருக்கிறார்  அவரை நம்புங்கள்  ஒரு துாய உள்ளத்தில் இருந்து வந்த சத்தியாமான

வார்த்தைகள். இன்று கூட  வார்த்தைகளுககுத்தான் எவ்வளவு உயிர்ப்பு இருக்கின்றது.

கிட்டண்ணை. மக்களின் இதயங்களில் கூடுகட்டி  வாழ்ந்த பறவை அது. அது எப்படி முடிந்தது  அதொன்றும் அதிசயமான தல்ல.

தங்களுக்காகச் சாவுக்கு முன்னால் நிற்க்கும் வீரன் ஒருவனை நேசிக்க எவருக்குமே காரணங்கள் தேவையில்லை.

கிட்டண்ணை சிறந்த ஒரு போராளி வீரன். அவரின் துணிவு வீரம் விவேகம் வேகமன செயல்..... எல்லாவற்றையுமே மக்கள் இரசித்தனர். விரும்பினார். தாய் நாடு தன் குழந்தையில் வைத்த பாசம் அது. மக்கள் பயந்து நடுங்கி உறக்கமற்ற விழித்த காலம். வீதிக்கு வீதி செத்தழிந்த காலம் எல்லாம் மாறிப்போனது கிட்டண்ணையின்  காலத்தில்தான். கோட்டையில் இருந்து ஆழி வெளிக்கிடுறானாம் மறுகணம் பி. அவசரமாக மேற்சட்டையைக் குட ஒழுங்காக அணியாமல் கிட்டண்ணை அங்கு நிற்பார். கிட்டர் நிற்கிறார் இனிப்பயமில்லை; மக்களின் மனங்களில் துணிவு பிறக்கும் இராணுவத்தினர் திரும்பி ஓடியதும் ஊர் முழுவதும் வெற்றிக் களிப்பு மகிழ்ச்சிக் கொண்டாட்டம். அது அவர்களின் பெற்ற வெற்றி.

பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு என்று எங்கு இராணுவத்தினர் புறப்பட்டாலும் அங்கு கிட்டண்ணை நின்றார். இரவிலும் பகலிலும் ஒவ்வொரு நாளும் சண்டை .

அந்தக் காலங்களில்தான் கிட்டண்ணை மக்களின் மனங்களில் வாழத் தொடங்கினார். அது நிரந்தரமான - அழிவற்ற - வாழ்வு; கோபித்தா லும் சண்டையிட்டாலும் சாகாத வாழ்வு.

வீதிகளின் ஓரங்களில், வயது முதிர்ந்த கிழவர்களுக்கு அருகில் விரித்து வைத்திருக்கும் வெற்றிலைச் சரையிலிருந்து பாக்குச் சீவலை எடுத்துக் கடித்தபடி, கிட்டண்ணை நாட்டு நடப்புகளைப் பேசிக் கொண்டி ருப்பார். சில மாலை நேரங்களில் இது நடக்கும். கிழவர்களுக்கோ தாராளமாக நேரமிருந்தது. கிட்டண்ணைக்கோ அப்படியல்லை. ஆனாலும் அந்த மாலை நேரங்களை அவர் விரும்பினார்.

, அந்த முதியவர்களின் நிலையோ சொல்லத் தேவையில்லை. அவர் கள் பெரிதும் மதித்த வீரன் அவர்களுக்கு முன்னால்... உண்மையில் அந்த நேரங்களில் அவர்கள் மிகவும் பெருமைப்பட்டார்கள்.

வீட்டு முற்றங்களில், பின் கோடிகளில், வெற்றுடம்பில் இழுத்து முடியப்பட்ட காற்சட்டைகளுடன் “சிறிய கிட்டுகள்” நிற்பார்கள். இடுப்பில் கிட்டண்ணையின் '357 மக்னம்' சுழற்துப்பாக்கியைப் போன்று இழு பட்டபடி வளைந்த தடி ஒன்று தொங்கும்.

கள்ளன் - பொலிஸ் விளையாட்டெல்லாம் மறைந்து புலிகள் - இராணுவ விளையாட்டுத் தொடங்கியிருந்தது.

விளையாட்டிலும் ‘சின்னக் கிட்டுகள்' ஒரு நாளும் தோற்பதில்லை. வெற்றி என்றும் வெற்றிதான். விளையாட்டில் கூடக் கிட்டு மாமா தோற்பதை அவர்கள் விரும்புவதில்லை.

இப்படித்தான் கிட்டண்ணை எல்லாரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்தார். அதனால் தான் அவருக்கு ஆபத்து என்ற போது மக்கள் துடித்தனர்.

அது 1987 இன் ஆரம்பம். வடமராட்சியில் இராணுவத்தினருடன் நடந்த சண்டையொன்றில் கிட்டண்ணையின் கையில் பட்டிருந்த காயம் குண மாகிச் சில நாட்கள் சென்றிருந்தன.

அப்போதுதான் தேசவிரோதிகளால் கிட்டண்ணைக்குக் குண்டு எறியப்பட்டது.

குண்டு வெடித்தது தெரியும். ஆனால், கிட்டண்ணைக்கு என்ன நடந்தது என்பது மக்களுக்குச் சரியாகத் தெரியாது. தமிழீழம் எங்கும் அதிர்ச்சி பரவியது மக்கள் சிரிப்பை மறந்து சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். தமிழ் நிலம் எங்கும் கவலையில் தவித்தது.

உயிருக்கு ஆபத்தில்லையாம் என்ற பொழுது ஓரளவு ஆறுதலாக இருந்தது. ஆனாலும், கவலை முற்றாகத் தீரவில்லை . ஏனெனில் கிட்டண்ணை ஒருகாலை இழந்திருந்தார்.

1987 மே நாள், மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்

“கிட்டண்ணை பேசுவதற்கு வருகிறாராம்” மக்கள் முகங்களில் மகிழ்ச்சி கிட்டண்ணையைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்.

கிட்டண்ணை பேசினார். தரமானதொரு பேச்சாளனுக்குரிய பேச்சு. அது மக்களின் பங்களிப்புக்குரிய பாராட்டு. ஒன்றிணைந்த மக்களை வாழ்த்திய பேச்சு.

அன்று மக்களிடையே உற்சாகமும் மகிழ்ச்சியும் கண்ணீரும் கரைபுரண்டு ஓடியது.

கிட்டண்ணையின் வீரத்தைப் போலத்தான் கோபமும் பிரசித்தமானது. ஒரு தாயின் கோபத்தைப் போல இரசித்து ஏற்றுக் கொள்ளும் கோபம். மறுகணம் எங்கென்று தெரியாது மறைந்துவிடும் கோபம்.

தோழர்களுக்கு அடியும் விழும். ஆனாலும், ஒருவரும் கோபிப்பதில்லை . கிட்டண் ணையில் உயிரையே வைத்திருக்கும் தன்மையைக் குறைப்பதுமில்லை. ஏனெனில் அவரின் கோபத்தினுள் இருக்கும் கனிவான இதயத்தை அவர்கள் அறிவார்கள்.

சண்டைகளின் பொழுது யாராவது ஒரு தோழன் காயமடைய நேரிட்டால் அந்த மனிதர் துடிக்கும் துடிப்பையும், யாராவது தோழனை இழந்துவிட்டால் முகம் கறுத்துத் தவித்து அழும் அழுகையையும் அவர்கள் கண்டவர்கள். அதனால் தான் கிட்டண்ணையில் யாரும் கோபிப்பதில்லை. அவரின் கோபம் தேவையானதே. இயக்கத்தின் ஒழுங்கையும் கட்டுப் பாட்டையும் பேணுவதற்கு அவசியமானது.

கோபத்தைவிட அவரின் உள்ளே இருந்த கனிவும் திறமையும் மனிதர்களை வென்றன.

குறிப்பார்த்துச் சுடுவதில் கிட்டண்ணை வல்லவர். இலக்கு பொதுவாகத் தவறு வதில்லை . அது அவருடைய எதிரிகளுக்குக் கூடத் தெரிந்த விடயம். எங்களூர்ப் பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பெருமை. ஆபத்தான வேளைகளில் கூட பதற்றமற்று, நிதானமாகத் துப்பாக்கியைக் கையாள்வார். சண்டைகளின் போது தேவையற்ற துப்பாக்கி இயக்கத்தை அவர் ஒரு போதும் செய்ததில்லை.

இதெல்லாவற்றிற்கும் அவருடைய முதலாவது தாக்குதலே சான்றாக நிற்கின்றது.

உமையாள்புரம். நிலக்கண்ணிகளைப் பொருத்தி விட்டு இராணுவத்தினரின் வருகைக்காக அவர்கள் பத்துப்பேர் காத்திருந்தார்கள். எல்லாம் சரி. இராணுவ வண்டிகள் வருவது தெரிந்தது.

கண்ணிவெடிகளைக் கையாளும் தொழில்நுட்ப அறிவைப் பெறாத காலம். இராணுவ வண்டிகளைப் பார்த்து மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் பாய்ச்சலுக்குக் கண்ணிகள் வெடித்தன.

புலிகள் வெவ்வேறு திசைகளால் பின்வாங்கினார்கள், அல்லது தப்பி ஓடினார்கள்.

வீதிக்கு அருகாகத் தண்டவாளம் இருந்தது. அதன் இரு பக்கமும் வெட்டை.

கவச வாகனங்கள் இரண்டு; துப்பாக்கி ரவைகளை அள்ளி வீசிக் கொண்டு நெருங்கி வந்தன.

ஒரு சிலர் விழலாம் என்ற நிலை. கிட்டண்ணை . தண்டவாளத்தில் நின்று திரும்பி தனது G 3 துப்பாக்கியால் கவசவாகனத்தை நோக்கிச் சுட்டார். தவறாத குறி. கவசவாகனத்தின் சாரதி காயப்பட்டான். அவ்வாகனம் துரத்தி வந்த வேகத்திற்குச் சரிந்து புரண்டது.

அவரது முதலாவது களமும் சாதனைதான்.

அதன் பின்பு, கிட்டண்ணை கண்ட ஒவ்வொரு கணமும் அவரது வீரத்தை வெளிப்படுத்தி நின்றது பகைவர்களைக் கலங்கடித்தது.

கிட்டண்ணை சிறந்ததொரு வீரன். அதைப் போன்றுதான், கமராவைத் தூக்கினால் சிறந்ததொரு படப்பிடிப்பாளன். அது தொலைக் காட்சிக் கமராவாக இருந்தாலும் சரி..... சிறந்ததொரு இலக்கியவாதி - எழுத்தாளன் - ஓவியன்.

போராளிகள் தொடர்பாக, போர்முனையில் அவர்களின் வாழ்க்கை தொடர்பாக உள்ளத்தைத் தொட்டுவிடும் உணர்வோடு அவரின் எழுத் துக்கள் வெளிப்படும்.

போராட்ட வாழ்வின் தத்துவமும் நிதர்சன தரிசனமும் அவர் எழுத்துக் களில் பரவிவிழும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் உயிர் போன்ற மக்கள் மீதான நேசம் அவர் எழுத்துக்களில் பரிணமிக்கும்.

சரி, இதெல்லாம் போக கிட்டண்ணையை நாங்கள் இழந்துதான்

போனோமா? உண்மைதான். ஏற்றுக்கொள்ளமுடியாத தெளிவான உண்மை .

"நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம் தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரிச்சயமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்திக்க போது எம் இதயம் உருக்குலைந்தது, தளர்ந்து....எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிப்படுத்த முடியும்?” - மேஐர் அல்பேட்டின் இழப்பை அடுத்து அவரைப்பற்றிய நினை வுக் குறிப்பில் கிட்டண்ணை இதை எழுதினார்.

நாங்கள் கூட ஒவ்வொரு போராளியின் இழப்பின் பின்பும் அழுது முடிய இதைத்தான் சொன்னோம் கிட்டண்ணை இதை எழுதுகையில் எம்மில் சில நூறு பேரைத்தான் நாம் இழந்திருந்தோம். இன்று ஆயிரக் கணக்கான தோழர்களை நாம் இழந்துவிட்டோம். எங்கள் இதயங்கள் பல முறை வெந்து தணிந்து விட்டன. ஆனாலும் இன்றுகூட எம்மால் இழப்பு களைத் தாங்க முடிவதில்லையே! அதிலும் கிட்டண்ணையை...!

| “கிட்டண்ணையும் அவர் தோழர்களும் வந்த கப்பலை இந்தியர்கள் வழிமறித்துவிட்டார்களாம்”- நெஞ்சில் அடித்தது போன்ற செய்தி. “இந்தியர்கள் விடமாட்டார்கள். அதுவும் கிட்டண்ணயை நிச்சயமாக விட மாட்டார்கள்”. 'அணு அணுவாகத் திலீபன் சாகும்வரை பார்த்துக்கொண்டிருந்த இந்தியா; தமிழர்கள் துடிக்கையிலும் புலேந்தி அம்மானையும் குமரப்பா வையும் சாகடித்த இந்தியா! தன் மரணவலைக்குள் சிக்கிவிட்ட கிட் டண்ணையை நிச்சயமாக விடாது தெரிந்த செய்திதான். ஒவ்வொருவரின் மனமும் சொன்ன செய்தி.

அவர்களுக்குத் தேவையெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் எதுவும் அமுக்கப்படவேண்டும், அழிக்கப்படவேண்டும். அதற்காக அவர்கள் என்னவும் செய்வார்கள்.

சர்வதேசச் சட்டங்களும் நடைமுறைகளும் இந்திய அரசிற்குத் தேவை யற்றன. அதை மாற்றவும் திரிக்கவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நேர்மையும் மனச்சான்றும் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்திற்கு இயல்பாகவே இல்லை.

சரணடைவதா! அது புலிகளின் மரபு இல்லை . அதுவும் கிட்டண்ணை ! தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு பகுதி - தமிழர்களின் மானச்சின்னம் - அவர்களின் மாபெரும் தளபதிகளில் ஒருவன் : தலைகுனிவது... சித்திரவதைப்பட்டு, அவமானப்பட்டு சாவது...

| “கிட்டண்ணை காப்பாற்றப்பட வேண்டும்”. தேசத்தின் இதயம் துடித்தது.. தமிழீழக்கரையெங்கும் ஆயிரமாயிரம் தோழர்கள் நின்று தவித்தார்கள்.

"எமது சிறிய படகு அலைகளால் தூக்கி மேலே மேலே வீசப்படவேகம் தடைப்படுகிறது. ஆனால், பாரிய நேவிப்படகுகள் கடல் அலைகளை வெட்டிக் கிழித்துக்கொண்டு பாய்ந்து வருகின்றன.

“அவற்றிலிருந்து சிவப்பு நிறமாகச் சீறிக்கொண்டு குண்டுகள் வரத்தொடங்கின.

“ஓட்டம், ஓட்டம், ஜீவ மரண ஓட்டம்.

"நேவிப்படகிலிருந்து பாய்ந்து வந்த ‘றேசர் ரவுண்ஸ்' ஒன்று எமது படகின் எரிபொருள் தாங்கியைத் துளைக்க....படகு தீப்பற்றி, பின்பு வெடித்துச் சிதறுகிறது.

பருத்துத்துறையிலே இன்பருட்டிக்கு நேரே எம்படகு துரத்தப்படுவதை அறிந்து, எம் வீரர்கள் படகு தப்பி வரும் என்று பார்த்துக் கொண்டிருக்க, எம்படகு எம் கண் முன்பே வெடித்துத் தீப்பற்றி எரிவதைக் கண்டோம்.

“ஆனால், செல்லமுடியாது. ஏன்! அது தரையில்லை ; கடல்”

பல வருடங்களுக்கு முன்பு சிறீலங்கா கடற்படையால் எமது தோழர்கள் வந்த படகு மூழ்கடிக்கப்பட்டபொழுது, 'திரை கடல் ஓடினோம்- திரவியம் தேடி அல்ல' என்ற தலைப்பில், கிட்டண்ணை இப்படித்தான் எழுதினார். ஆனால் இன்று... நீண்ட தொலைவில், இந்திய வல்லாதிக்கப்பிடிக்குள் கிட் டண்ணை ... நாங்கள் செல்லமுடியாது. ஏன்?

கடலில், புலிகளின் கப்பலைச் சுற்றி இந்தியப் போர்க் கப்பல்கள். சரணடைய வேண்டும் அல்லது அந்தப் பாரிய போர்க் கப்பல்கள், சமாதான நோக்கத்தோடு ஆயுதங்களற்று வந்த புலிகளின் கப்பலை மூழ்கடிக்கும். பின்பு, தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து தமது போர்க் கப்பலைத் தாக்க வந்த புலிகளின் கப்பலை மூழ்கடித்ததாகக் கதையினை உருவாக்கும்.

இந்திய அதிகாரிகளும் செய்தி நிறுவனங்களும் பொய் சொல்வதில் வல்லவர்கள். புலிகளின் மீது இலகுவாகப் பழி சுமத்தப்படும்.

“சரணடையப் போவதில்லை ' சாவு நிச்சயமாகிப்போனது. ஆனால், அந்தச் சாவு எதிரிகள் தலைகுனியும் சாவாக இருக்க வேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும். தாய் நிலத்தைத் தலைநிமிரச் செய்ய வேண்டும்.

சண்டைக்களங்களில் எல்லாம் கிட்டண்ணையைக் காப்பாற்ற நூற்றுக் கணக்கான தோழர்கள் நின்றார்கள். ஆனால், இன்று...

குட்டி சிறி அருகில் நின்றான். அவன் சின்ன வயதில் இயக்கத்தினுள் வந்தவன். அதனால்தான் அவனுக்கு அந்தப் பெயர். அவன் பெரிய ஆளாக வளர்ந்த பின்பும் அந்தப் பெயர் மாறவே இல்லை.

அவன் அழுதிருப்பான், தனக்காக அல்ல, கிட்டண்ணைக்காக. அவரில் அவன் உயிரையே வைத்திருந்தான். தன் சாவுக்காக அந்த உறுதி மிக்க வன் ஒரு போதும் கலங்கியவனில்லை .

இப்போது கலங்கி இருப்பான். மற்றத் தோழர்களும் கிட்டண்ணையைக் காப்பாற்ற முடியாமல் போகிறதே எனத் தவித்திருப்பார்கள். ஆனால் பிரச்சினை எல்லோரின் கைகளுக்கும் மேலே சென்றிருந்தது.

இந்திய வல்லாதிக்கப்பேய்கள் இறங்கி வரப்போவதில்லை.

எங்கள் தொலைத் தொடர்புக் கருவி கப்பலிலிருந்து வரும் செய்திக்காகக் காத்திருந்தது. தேசம் துடித்தது. தலைவர் தவித்துக் கொண்டிருந்தார். அவர் வளர்த்தெடுத்த தளபதி - கடினமான காலங்கள் எல்லாம் தோளோடு தோள் கொடுத்து ழைத்த தோழன்

சாவின் விளிம்பில்....

முடிவு உறுதியாகியது. ஒரு கணத்தில் கப்பல் சிதறும்; காணாமற் போகும்.

கப்பற் சிப்பந்திகள் வெளியேறினார்கள்.

தேசம், அம்மா, அண்ணன், அன்பான மனைவி, தன்னில் உயிரை வைத்திருக்கும் தலைவன் எல்லோருமே கிட்டண்ணையின் நெஞ்சில் ஒரு கணம் வந்து விட்டுச் சென்றிருக்கலாம், ஆனால் வெளித் தெரியாது.

விடைபெற்றிருப்பார்கள் - தேசத்திடமிருந்து, தோழர்களிடமிருந்து, தலைவனிடமிருந்து...

கடற்கரைக் கிராமத்து வீடொன்றில் கப்பலுடன் தொடர்பில் இருந்து தொலைத்தொடர்புக்கருவி நீண்ட நேரம் காத்திருந்தது. ஏதாவது செய்தி வராதா...வருகிறதா...

‘கிட்டண்ணையை இழந்து விட்டோம்'.

கடல் ஆர்ப்பரித்தது. அலைகள் எழுந்து இதயத்தில் அடித்தன. தேசத்தின் நெஞ்சு துடித்தது; தவித்தது; கதறி அழுதது; ஒரு கணம் தயங்கி நின்றது.

தாங்க முடியாத இழப்பு.

எங்கள் போராட்டப்படகு இப்படித்தான். தாங்க முடியாத இழப்புக்கள் வரும்போது ஒரு கணம் தயங்கி நிற்கும். பின் 'தலைவன் இருக்கிறான்' எனத் தொடர்ந்து செல்லும்.

அது கிட்டண்ணை சொல்லித் தந்த பாடம்.

நன்றி: விடுதலைப்புலிகள் (குரல் - 36)Image
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.