லெப்டினன்ட் சிவா அவர்கள் ஏழாலை வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குணசிங்கம் சுரேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஜூன் 1997 அன்று யாழ். மாவட்டம் நவாலி வை.எம்.சி. பகுதியில் சிறிலங்கா படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.