கரும்புலி 2-ஆம் லெப்டினன்ட் இசைச்செல்வன் அவர்கள் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நாகராசா சண்முகசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.