கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்) அவர்கள் கொக்குவில், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.