மறைமுகக் கரும்புலி கப்டன் மதியவள் அவர்கள் 31 ஜனவரி 1997 அன்று கொழும்பில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா படையினர் வழிமறித்து விசாரணைக்குட்படுத்தியவேளை சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.