மறைமுகக் கரும்புலி கப்டன் நிவேதன் (தமிழன்பன்) அவர்கள் 29 டிசம்பர் 1995 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடிப் பாலத்தில் சிறிலங்கா படை அதிகாரி சென்ற பஜிரோ ஊர்தி மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதல் முயற்சியின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.