கப்டன் அருள்சந்திரன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கதிர்காமத்தம்பி நிமலதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1 ஆகஸ்ட் 2007 அன்று திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.