ஈரோஸ் மாவீரர் மதுரவால் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். நகுலேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 டிசம்பர் 1984 அன்று திருகோணமலை மாவட்டம் யான்ஓயாப் பகுதியில் சிறிலங்கா படையினரால் கைதாகி மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.