துணைப்படை வீரர் வீரவேங்கை கண்ணன் அவர்கள் 1-ஆம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர். து. தயானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 செப்டம்பர் 2000 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.