கரும்புலி மேஜர் குமலவன் அவர்கள் பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவப்பிரகாசம் லுகாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 மே 2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.