கடற்கரும்புலி கப்டன் வீரமணி அவர்கள் கந்தர்மடம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஏப்ரல் 2000 அன்று மன்னார் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.