கடற்கரும்புலி கப்டன் கானவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சிவஞானம் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 டிசம்பர் 1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.