வீரவேங்கை செல்வன் அவர்கள் ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். பிலிப்பு பெனடிக்ற் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஏப்ரல் 1985 அன்று தமிழீழக் கடற்பரப்பினூடாக தமிழகம் நோக்கிச் சென்றவேளை சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.