லெப்டினன்ட் தவேந்திரன் அவர்கள் லிங்கநகர், திருகோணமலையைச் சேர்ந்தவர். அமிர்தலிங்கம் சுந்தரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 ஏப்ரல் 1985 அன்று தமிழீழக் கடற்பரப்பினூடாக தமிழகம் நோக்கிச் சென்றவேளை சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.