வீரவேங்கை வில்லவன் அவர்கள் 4-ஆம் வட்டாரம், பேசாலை, மன்னாரைச் சேர்ந்தவர். தேவசகாயம் சதீஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 மார்ச் 1996 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.