வீரவேங்கை சிவா அவர்கள் மூளாய் தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் சிவகுமாரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 நவம்பர் 1984 அன்று யாழ். மாவட்டம் சுழிபுரப் பகுதியில் சுவரொட்டி ஒட்டப் போகும்போது புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.