2-ஆம் லெப்டினன்ட் கிருபா அவர்கள் நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். பழனியாண்டி சரவணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 03.04.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முற்றுகைக்கு எதிரான சமரின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது 9 ஏப்ரல் 2009 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
03.04.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முற்றுகைக்கு எதிரான சமரின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.