நாட்டுப்பற்றாளர் கிருபைராஜா அவர்கள் மாவடிவேம்பு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை கிருபைராஜா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஏப்ரல் 1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சந்தனமடு ஆறுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்டமோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.