நாட்டுப்பற்றாளர் கந்தஞானி அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். முத்துக்குமார் கந்தஞானி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 ஜூன் 2007 அன்று சுகவீனம் காரணமாகச் சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.