ஈரோஸ் மாவீரர் மைக்கல் அவர்கள் நாவாந்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மைக்கல் லிபோன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 ஜனவரி 1986 அன்று தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்த போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.