வீரவேங்கை சாந்தன் அவர்கள் நாவற்குளம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். செல்லையா வைகுந்தவாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஏப்ரல் 2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகாவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.