எல்லைப்படை வீரர் வீரவேங்கை பத்மவேலரசன் அவர்கள் பொருதானை, மாதகல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சின்னத்துரை பத்மவேலரசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 டிசம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் பாலம்பிட்டிப் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.