கப்டன் சான்றோன் அவர்கள் 6-ஆம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலையைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை உதயகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஜூலை 1998 அன்று யாழ். மாவட்டம் குருநகர்ப் பகுதியில் அமைந்திருந்த காவல்துறை காவலரண் மீதான தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.