மேஜர் நெடுமாறன் அவர்கள் நவாலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆறுமுகம் சர்வேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 நவம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.