கப்டன் புகழ்வேந்தன் அவர்கள் புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திருநாவுக்கரசு பிரதீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.